Categories
உலக செய்திகள்

“நோய் பாதிப்பு” 75 கோடி கொசுக்களை நாட்டில் விடும் அரசு… எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்….!!

அமெரிக்க அரசு கொசுக்களால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த கொசுக்களுக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்டும் ஆய்வினை ஏற்றுள்ளது.

உலகளவில்  புதிது புதிதாக நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாக உருவாகி வருகின்றன. இதற்கு வைரஸ்களும், கொசுக்களும் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்தநிலையில் கொசுக்களால் பரவும் டெங்கு, சிக்கன் குனியா மற்றும் ஜிகா போன்ற நோய்களை தடுப்பதாக விபரீத முயற்சியில் அமெரிக்க அரசு இறங்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில்  இந்த ஆண்டு பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அமெரிக்க இந்த விபரீத முயற்சியை அங்கு தொடங்க உள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் மூலம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட 75 கோடி கொசுக்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில்  புளோரிடா மாகாணத்தில் வெளியேற்றப்பட உள்ளது. இந்த கொசுக்கள் டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்பும் கொசுக்களின் இனப்பெருக்கத்தை தடுத்து அவற்றை முழுமையாக ஒழிக்கும் பொருட்டில் அமெரிக்க அரசு இத்திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கு புளோரிடா மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |