செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் செய்திதொடர்பாளரும், நிர்வாகியுமான நாராயணன் திருப்பதி, மாநில அரசினுடைய நிறுவனங்கள் அனல் மின் நிலையங்களில் 100 யூனிட் தயாரிக்கின்ற இடத்தில் ஏன் 500 யூனிட் தயாரிக்கிறார்கள் ? இப்போது உங்களிடம் நிர்வாக சீர்கேடு இருக்கிறதா இல்லையா? நீங்கள் எதற்காக உற்பத்தியை 50 சதவீதம் தான் ஆகுது, காரணம் என்னவென்றால்..
இங்கே குறைவாக ஆகிறது, 16 ரூபாய் கொடுத்து வெளியே வாங்க வேண்டும். அப்போது நீங்கள் தனியாரிடம் தானே கொள்ளையடிக்கிறீர்கள். தனியார் என்றால் யார், தனியார் என்றால் நானும், நீங்களும் தான் தனியார். தனியார் உற்பத்தி செய்தால் என்ன தவறு? தனியார் உற்பத்தி செய்யலாம், ஆனால் வினியோகம் செய்யக்கூடாது, இதில் என்ன நியாயம் இருக்கிறது ? அரசு உற்பத்தி செய்யுங்கள் என்று சொன்னால் அதனுடைய உற்பத்தியை கவனிப்பதற்கு துப்பு இல்லை, அதுதான் உண்மை.
ஆனால் நீங்கள் விநியோகம் செய்யக்கூடாது என்று ஏன் சொல்கிறீர்கள் என்றால்… வினியோகம் செய்வதில் தான் கொள்ளை அடிக்க முடியும். தனியாரிடம் வந்துவிட்டால் என்ன நடக்கும் ? போட்டி வரும், எந்த ஒரு தொழிலிலும் போட்டி இருந்தால் விலை குறையும். தனியாரிடம் மின்சாரத்துறை வந்தால் மோனோபோலி…. டாங்கெட்கோ தான் வாங்கி விற்க வேண்டும் என்பதினால் தான், நாம் அதை சார்ந்து இருக்கிறோம். அதை சார்ந்து இவர்கள் இருக்கிறார்கள், லாபம் யாருக்கு ? அரசியல்வாதிகளுக்கு, அதிகாரிகளுக்கு லாபம் என விமர்சித்தார்.