பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதில் பிளஸ் 1 மாணவர்களுக்கு நாளை ஒரு தேர்வும் , வியாழக்கிழமை (26 ஆம் தேதி ) ஒரு தேர்வும் இருக்கின்றது. அதே போல + 2 மாணவர்களுக்கு நாளை மறுநாள் ஒரு தேர்வுகள் தேர்வு என்பது அட்டவணைப்படி திட்டமிடப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே கொரோனா சார்ந்த ஒரு அச்சம் இருக்கக்கூடிய காரணத்தால் இவர்களுக்கான பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை பரவலாக ஆசிரியர்கள், பெற்றோர்கள் தரப்பில் இருந்து முன் வைக்கப்பட்டு இருந்தது. தற்போது தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் , ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இந்த 3 மாவட்டங்களில் அத்தியாவசிய தேவையை தவிர எதுவும் நிகழாது என்பதால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தற்போது வரைக்கும் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. ஆனால் ஒத்திவைக்க வேண்டிய தேவை எந்த அளவு இருக்கிறது என்பது குறித்து ஆலோசனை நடைபெறுகின்றது என்று தெரிவித்தார்.
இந்தநிலையில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் தொடர்பாக தேர்வு ஒத்தி வைக்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் பள்ளி கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.