சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளை போல் பொது இடங்களில் குப்பை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொது இடங்களில் குப்பை கொட்டினாலும் எச்சில் துப்பினால் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என தனித்தனியே கட்டண முறையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
பொது இடங்களில் குப்பை கொட்டுவது, எச்சில் துப்புவது போன்றவைகளுக்கு அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ள இந்த சட்டம் அடுத்த மூன்று மாதங்களில் சென்னையில் அமல்படுத்தப்படும் என்றும், அதன்பின் தமிழகம் முழுவதும் சட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.