Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சாமி கும்பிட சென்ற மூதாட்டி….. சேலையில் தீ பிடித்து….. உடல் கருகி மரணம்…. காஞ்சி அருகே சோகம்….!!

காஞ்சிபுரம் அருகே சாமி கும்பிடும்போது சேலையில் தீப்பிடித்து உடல் கருகி மூதாட்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியை அடுத்த புது  மேட்டுத் தெருவில் வசித்து வந்தவர் வள்ளியம்மாள். 80 வயதாகும் இவர் தினமும் கோவிலுக்கு செல்லும் பழக்கம் உடையவர். அந்த வகையில், வழக்கம்போல் நேற்று காலை 8 மணியளவில் அருகில் உள்ள கெங்கையம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றுள்ளார்.

அங்கு பொருத்தி வைக்கப்பட்டிருந்த அகல் விளக்கில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த மூதாட்டி  சேலை பட்டு தீ பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. இதில் தீக்காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். தற்போது இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |