சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மளிகை கடைக்காரர் ஒருவர் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி ரயில்வே குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த மளிகை கடை வியாபாரியான 63 வயது நபர் ஒருவர் காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த வாரம் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தீவிர சிகிச்சைக்கு பின் பூரண குணமடைந்த அவர் சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பியுள்ளார்.
அதன்பின் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.