இவர் நடிகர்கள் விஜய், சூர்யா, பவன் கல்யாண் , மோகன்லால் உட்பட பல பிரபலங்களுக்கு பாதுகாவலராக இருந்து வந்தார்.. இவரது மறைவுக்கு மம்முட்டி, மோகன்லால், பிரித்திவிராஜ், துல்கர் சல்மான், டோவினோ தாமஸ், நிவின் பாலி, மஞ்சு வாரியர் உட்பட பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
படப்பிடிப்பு முதல் பொது நிகழ்ச்சிகள் வரை நடிகர்களை பாதுகாப்பாக அழைத்து செல்பவர்கள் பாடிகாட்ஸ்.. அலைகடலென ரசிகர்கள் திரண்டாலும் நடிகர்களை பாதுகாப்பாக கவனித்து கொண்ட தாஸ் மரணமடைந்திருப்பது திரையுலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.