அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வருகைக்காக 100 கோடி செலவிடப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தநிலையில் மாநில அரசு இத்தனைகோடி ரூபாய் மட்டுமே செலவிட்டதாக குஜராத் முதல்வர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 24-ஆம் தேதி அரசு முறை பயணமாக இந்தியா வந்தார். அவருடன் டிரம்ப் மனைவி மெலனியா, மகள் இவாங்கா ட்ரம்ப், மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் வந்திருந்தனர். குஜராத்தின் அஹமதாபாத் நகருக்கு வந்த ட்ரம்பை நேரில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். அதிபர் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
2 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்த ட்ரம்ப் சமர்பதி ஆசிரமம் , நமஸ்தே ட்ரம்ப் , தாஜ்மஹால் , அணிவகுப்பு மரியாதை, காந்தி சமாதி , பெங்களூர் கவுஸ் மோடியுடன் சந்திப்பு , கூட்டாக செய்தியாளர் சந்திப்பு, அமெரிக்கா தூதரகத்தில் தொழிலதிபர்களுடன் ஆலோசனை , செய்தியாளர்கள் சந்திப்பு , ராஷ்ட்ரிய பவனில் இரவு விருந்து என பல்வேறு நிகழ்வுகளில பங்கேற்றார். பின்னர் 29 ஆம் தேதி இரவு குடியரசு தலைவர் மாளிகை ராஷ்ட்ரிய பவனில் இரவு உணவு முடித்து விட்டு அமெரிக்கா கிளம்பி விட்டார்.
முன்னதாக அதிபர் டிரம்ப் நிகழ்ச்சிக்காக அரசு 100 கோடி செலவளித்துள்ளதாக தகவல் இந்தியா முழுவதும் பரவியது. நாட்டு மக்கள் அனைவரும் இவ்வளவு கோடியா என வாயை பிளந்து விட்டனர். எதிர் கட்சியான காங்கிரஸ் 100 வெறும் 3 மணி நேரத்திற்கு கோடியா? என கேள்வியெழுப்பினர். ஆனால் உண்மையிலேயே இத்தனை கோடி ஆகியிருக்குமா என்று அனைவருக்கும் ஒரு சந்தேகம் இருந்து வந்தது.
இந்த நிலையில், அதிபர் டிரம்ப் 3 மணி நேர நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு 100 கோடி ரூபாய் செலவானதாக குஜராத் சட்டசபையில் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இதற்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய் ரூபானி, 100 கோடி செலவானது என்று சொல்வது ஆதாரமற்றது. அதிபர் டிரம்ப்பின் வருகைக்கு மொத்தம் ரூ .12 கோடியே ரூ .50 லட்சம் வரை செலவாகியுள்ளது என்று தெளிவுபடுத்தினார். அதில் ரூ.8 கோடி மாநில அரசு நிதியிலும், மீதமுள்ளவை அகமதாபாத் மாநகராட்சி நிதியிலும் செலவிடப்பட்டதாக அவர் கூறினார். முதல்வர் விஜய் ரூபானி தற்போது தெளிவுபடுத்தியுள்ளதால் உண்மையிலேயே எத்தனை கோடி செலவாகியுள்ளது என்று நமக்கு தெரிந்து விட்டது.