Categories
மாநில செய்திகள்

#மன்னிப்பு_கேட்க_முடியாது…. உலகளவில் மாஸ் காட்டும் சூப்பர்ஸ்டார் ரஜினி.!!

ரஜினிகாந்த் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியநிலையில் தற்போது #மன்னிப்பு_கேட்க_முடியாது என்ற ஹேஸ்டேக் உலகஅளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

துக்ளக் இதழின் 50ஆவது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது ராமருக்கு காலணி மாலை அணிவித்து பெரியார் தலைமையில் திராவிடர் கழகத்தினர் ஊர்வலம் நடத்தியதாகவும், அந்த செய்தியை தைரியமாக வெளியிட்ட ஒரே இதழ் துக்ளக்தான் எனவும் புகழ்ந்தார். ரஜினியின் இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநிலம் முழுவதும் ரஜினிக்கு எதிராக காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன.

Image result for ரஜினிகாந்த்

வாய்க்கு வந்த கருத்துகளை ரஜினி பேசிவருவதாகவும், பெரியார் குறித்து அவதூறு பரப்பியதற்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்தனர். அதுமட்டுமின்றி மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினிகாந்தின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் வெளிப்படையாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

இந்த சூழலில் இன்று காலை சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது. இல்லாத ஒன்றையோ, கற்பனையாகவோ, தவறாகவோ எதுவும் நான் கூறவில்லை. நான் கேள்விப்பட்ட, 2017ஆம் ஆண்டு அவுட்லுக் பத்திரிகைகளில் வந்ததை தான் நான் பேசினேன். இதற்காக நான் மன்னிப்பு கேட்கமாட்டேன், வருத்தமும் தெரிவிக்கமாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

ரஜினியின் இந்த கருத்துக்கு சிலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது #மன்னிப்பு_கேட்க_முடியாது, #சூப்பர்சங்கிரஜினி, #ரஜினிகாந்த் என்ற ஹேஸ்டேக் உலகஅளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த ஹேஸ்டேக் மூலம் பலரும் பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |