Categories
அரசியல் மாநில செய்திகள்

”தலை”யே சரி கிடையாது..! பிறகு ”வாலு” ஒழுங்காவா இருக்கும்… 2024இல் விடை தேடும் AIADMK .!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரிடம், அதிமுகவின் நிர்வாகிகள் யாரும் தவறு செய்தால் உடனே நீக்கிவிடுவார்கள். ஏற்கனவே திமுகவில் இரண்டாவது முறை ஏற்கனவே நான் தான் கவுன்சிலர்ன்னு சொன்ன ஜெகதீசன் மீண்டும் கட்சியில் இருக்கிறார்.  எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மேற்கொண்டு இந்த மாதிரி செயலில் ஈடுபட்டாரா ? என பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்க்கு பதிலளித்த அவர், வேலி தான் பயிரை காப்பாற்றணும். வேலியே பயிரை மேய்யுற மாதிரி, தலையே சரி இல்ல, அப்டிங்கும்போது வாலு எப்படி சரியா இருக்கும். அதனால் திமுகவில் எல்லாம் அப்படி தான் இருக்கும். எல்லாருமே அடாவடி பண்ணுறவுங்க தான். இதனால் இது ஒன்னும் புதுசு கிடையாது. இதற்கு எல்லாம் ஒட்டுமொத்தமாக தமிழக மக்கள் பதில் சொல்லுவாங்க.

வருகின்ற 2024-ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் விடை கிடைக்கும். இந்த அடாவடிகள், அராஜகம், அநியாயம், அட்டூழியம் எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து மீண்டும் நம்முடைய இதய தெய்வம் புரட்சி தலைவர் புகழ், புரட்சி தலைவி அம்மாவின் புகழ் தமிழ்நாட்டிலே ஒழிக்கிற வகையில் எல்லா பாராளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என தெரிவித்தார்.

Categories

Tech |