Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பாகற்காய் பாடலுக்கு நடனமாடி கும்மியடித்த தலைமை ஆசிரியை”…. வைரலாகும் வீடியோ….!!!!!

திருவாரூரில் ஆடிப்பாடி கும்மியடித்து தலைமை ஆசிரியை அசத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் காலாண்டு விடுமுறையின் போது தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்கின்ற கற்றல் செயல் திட்டத்திற்கான பயிற்சி வகுப்புகள் அந்தந்த மாவட்டங்களில் நடந்தது. அந்த வகையில் திருவாரூரில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் 200க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பங்கு பெற்ற எண்ணும் எழுத்தும் இயக்கத்தின் கீழ் பயிற்சி வகுப்பு நடந்தது.

இதில் திருவாரூர் துர்காலயா சாலையில் அமைந்திருக்கும் மெய்ப்பொருள் அரசு உதவி பெறும் பள்ளியின் தலைமை ஆசிரியை சுமத்தி ஒன்றாம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம் பெற்ற பாகற்காய் பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடி கும்மியடித்து சக ஆசிரியர்கள் முன்பு பாடி அசத்தினார். இதை கண்ட சக ஆசிரியர்கள் தங்களின் செல்போன்களில் வீடியோ எடுத்து இணையத்தில் பரவ விட்டார்கள். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகின்றது. இதுகுறித்து தலைமை ஆசிரியை சுமதியிடம் கேட்டபோது, நான் பள்ளியில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் இதுபோல ஆடிப்பாடி அவர்களின் மனதில் அந்த பாடலை பதிய வைத்து வருகின்றேன் என கூறியுள்ளார்.

Categories

Tech |