Categories
உலக செய்திகள்

இறந்து போன மகனின் இதயத்துடிப்பை…. டெடிபியரில் கேட்ட அப்பா…. கண்ணீர் வரவழைக்கும் வீடியோ…!!

இறந்த மகனின் இதயத்துடிப்பை டெடிபியரில் கேட்ட தந்தை கண்ணீர் விட்டு அழும்  வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

பெற்றோர்களாகிய நாம் எப்பொழுதுமே தங்களது குழந்தையின் மேல் அளவுக்கதிகமான பாசத்தை வைத்திருப்போம். அவர்களை பிரிந்து நம்மால் அவ்வளவு எளிதில் இருந்து விட முடியாது. மேலும் அவர்களின் மரணத்தை விரும்ப மாட்டோம். அப்படி அச்சம்பவம் நிகழ்ந்தால் அது நம் குடும்பத்தையே அளிக்கக்கூடிய ஒரு சோக நிகழ்வாக அமையும். இருப்பினும் தங்கள் துக்கத்தை மறந்து அவர்கள் எடுக்கும் முடிவுகளில், பிறரது வாழ்க்கை மாற்ற கூடியதாகவும் இருக்கலாம். கடந்த வருடம் கார் விபத்து ஒன்றில் ஜான் ரீட் என்பவர் தன்னுடைய மகனை இழந்துள்ளார்.

இருப்பினும் தன்னுடைய மகன் இறந்தாலும் உயிர் வாழ வேண்டும் என்று விரும்பிய அவர், தன்னுடைய மகனின் உடல் உறுப்புகளை ஒருவருக்கு தானமாக அளித்துள்ளார். மேலும் சமீபத்தில் தன்னுடைய மகனின் இதயத்தை தானமாக பெற்ற நபரிடமிருந்து ஜானுக்கு ஒரு டெடிபியர் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. அந்த டெடி பியரில் ஜானின் இறந்த மகன் இதயத்துடிப்பு பதிவு செய்து பரிசாக கொடுத்துள்ளார். இதை ஜானின் நண்பர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், அந்த அட்டைப்பெட்டியில் இருக்கும் கடிதம் ஒன்றை எடுத்து ஜான் படிக்கிறார். அப்போது அந்த கடிதத்தை அவர் உணர்ச்சிவசப்பட்டு படிக்கிறார். பின்னர் அதில் இருந்த டெடி பியரில் ஜானின் மகனின் இதயத்துடிப்பு பதிவு செய்யப்பட்டிருந்துள்ளது. இதையடுத்து ஜான் டெடி பியரை காதில் வைத்து தனது மகனின் இதய துடிப்பை கேட்கிறார். அப்போது அவரை அறியாமலேயே அடக்க முடியாத அளவுக்கு கண்ணீர் வருகிறது. இதை பார்த்த நமக்கும் கண்களில் கண்ணீர் வருகிறது அல்லவா. இது 2.5 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது மற்றும் பலரும் சிறந்த தந்தை என்று பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |