காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடனான உறவை முறித்துக் கொண்ட அதன் எதிரொலியாக பாகிஸ்தானில் பெட்ரோல் டீசலை விட அதிக விலையில் பால் விற்பனை ஆகிறது.
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததால் அதிர்ச்சி அடைந்துள்ள பாகிஸ்தான் கோபத்தில் இந்தியாவுடனான வணிக உறவை முறித்துக் கொண்டது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஏறக்குறைய 100 தயாரிப்புகளுக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது. இதனால் பெரும்பாலான காய்கறிகளின் விலையும் இரட்டிப்பாகி உள்ளது.
மொஹரம் நாட்களில் பாகிஸ்தானில் பாலின் தேவை அதிகமாக இருக்கும். இந்த நாளில் பாலின் விலை உயர்வது வழக்கம். இந்நிலையில் இந்தியாவுடனான வர்த்தக முறிப்பால் பாகிஸ்தானில் பால் ஒரு லிட்டர் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 113 ரூபாய்க்கு ஒரு லிட்டர் டீசல் 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது பாலின் பெட்ரோல் , டீசலின் விலையை விட அதிகரித்துள்ளது.
இதனால் அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது தங்கள் வாழ்நாளில் இவ்வளவு அதிக விலைக்கு வாங்கியது இல்லை என பொது மக்கள் கூறியுள்ளனர். இந்தியாவுடன் வீராப்பு காட்டுவதாக எண்ணி பாகிஸ்தான் தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்டுள்ளதில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவது வேதனையின் உச்சம்.