தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீசான திரைப்படம் ”லவ் டுடே”.இந்த படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இவானா. இவர் இதற்கு முன் பாலா இயக்கத்தில் வெளியான நாச்சியார் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லவ் டுடே திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. தற்போது இவர் பிரபல நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், கண்கலங்கியுள்ளார்.
ஏனெனில், இவானா மற்றும் இவரின் சகோதரர் ட்வின்ஸ் எனவும். 12 ஆம் வகுப்பிற்கு பிறகு அவரின் சகோதரர் வெளிநாட்டுக்கு படிக்க சென்று விட்டாராம். இவரை மிஸ் செய்வதாக கூறி இவானா கண் கலங்கி பேசியுள்ளார். மேலும், ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் இன்னொருவருக்கும் அப்படி இருக்கும் எனவும் கூறினார்.