Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஸ்டாலினுக்கு பேச தடையில்லை” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

 தேர்தல் நேரத்த்தில் எதிர்க்கட்சி , ஆளுங்கட்சி பரஸ்பரம் விமாசர்சிக்க என்ன இருக்கிறது என்று கூறி ஸ்டாலினுக்கு பேச தடைவிதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான  வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.  இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதில் அரசியல் கட்சிகள் ஒவ்வொரு கட்சிகள் மீது மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அதிமுக அரசின் மீதும் , அமைச்சர்கள் மீதும் கடும் விமர்சனம் செய்து வருகின்றார்.

அமைச்சர் வேலுமணி க்கான பட முடிவு

இந்நிலையில் உள்ளாட்சிதுறை அமைச்சர் SP.வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளாட்சி துறை ஊழல் குறித்தும் , பொள்ளாச்சி சம்பவ குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சிப்பதாக தேர்தல் பரப்புரையில் அவதூறு பேசி வருகின்றார்.இதனால் தான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே எனக்கு 1 கோடி மான நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் , முக. ஸ்டாலின் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பிரசாரத்தில் பேச கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.

ஸ்டாலின் பேச்சு க்கான பட முடிவு

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தத போது , தேர்தல் நேரத்த்தில் எதிர்க்கட்சி , ஆளுங்கட்சி பரஸ்பரம் விமாசர்சிக்க என்ன இருக்கிறது என்று கூறி அமைச்சர் வேலுமணியின் கோரிக்கையை நிராகரித்தார். மேலும் இது குறித்து வருகின்ற 16_ஆம் தேதிக்குள் முக.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டுமென்று கூறி இந்த வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Categories

Tech |