மலைவாழ் மக்கள் புதியதாக டிராக்டர் மூலம் உழுது பணியை ஆரமித்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள வடவள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட எரிமலை, கோட்டூர்மலை ஆகிய மலை கிராமங்களில் இதுவரை சாலை வசதி கிடையாது. இந்நிலையில் இந்த கிராமப்புறங்களில் உள்ள மலைவாழ் மக்கள் தங்களுடைய பட்டா நிலங்களில் மாடுகளைக் கொண்டு ஏர் உழுது விவசாயம் செய்து வந்துள்ளனர். இதனை அடுத்து சில வருடங்களாக நாட்டுமாடுகள் படிப்படியாக குறைந்து வருவதால் அதனை வைத்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் சாலை வசதி இல்லாதால் டிராக்டர் பயன்படுத்தி விவசாயம் செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சட்டசபை தேர்தலின் போது எரிமலை, கோட்டூர் மலை ஆகிய இரு வாக்குச்சாவடிகளில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அதிகாரிகள் கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்துள்ளனர். தற்போது அதிகாரிகள் அளித்த வாக்குறுதியின்படி கிராமங்களுக்கு உழுது பணிகளுக்காக டிராக்டர்களை வழங்க உள்ளனர். எனவே தங்களின் கிராமங்களுக்கு மலையின் சாலை பகுதி வழியாக டிராக்டரை கொண்டு செல்ல வனத்துறையினர் அனுமதி அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் படி அந்த மலை கிராமத்திற்கு செல்லும் சாலையை சீர் அமைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து சீரமைக்கப்பட்ட இந்த சாலைகளின் வழியை டிராக்டர்களை கொண்டு சென்று முதல்முறையாக டிராக்டர் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர்.