குடிசைத் தொழில் செய்து வருபவர் வீட்டில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது
திண்டுக்கல்லில் ஆரோக்கியமாதா தெருவை சேர்ந்தவர் அருந்ததி. இவர் தனது வீட்டில் குடிசை தொழிலாக பலகாரம் செய்து விற்பனை செய்து வருகிறார். எப்போதும் போல் இன்று காலையும் வழக்கம்போல் பலகாரம் செய்வதற்காக அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்பொழுது திடீரென அடுப்பில் இருந்த தீப்பொறி சிதறி அங்கிருந்த பொருளின் மீது விழுந்ததால் பற்றி எரிந்தது. மேலும் அதிகமாக தீ பரவியதால் பயம் கொண்ட அருந்ததி உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
தீப்பற்றி பரவுவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஒன்றாக திரண்டு வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். இருந்து முடியாத காரணத்தினால் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் வேகமாக வந்து தீயை அணைத்தனர். இருந்தபோதும் அருந்ததியின் கடையில் இருந்த பெரும்பாலான பொருட்கள் தீயில்கரிந்து நாசமாகி உள்ளது. இதனால் அருந்ததி மிகுந்த வேதனை அடைந்துள்ளார்.