உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஜான்பூர் மாவட்டத்தில் மொபைல் போன் திருடியதாக ஒருவரை, சந்தேகத்தில் அப்பகுதி மக்கள் சிலர் கொடூரமாக செருப்பு மற்றும் கட்டைகளை கொண்டு தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.. அந்தநபரை பொதுவெளியில் செருப்பு மற்றும் கட்டைகளைக் கொண்டு அடித்தது சட்டத்துக்கு மீறிய செயல் என்றும் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்து விசாரணை நடத்திய போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.. அதில், ஒருவர் தலைமறைவாகியிருக்கும் நிலையில், 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..