சென்னை ஓட்டேரி மங்கலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் டார்வின் ராஜ் (48). இவர் ஆட்டோ ஓட்டுநராகத் தொழில் செய்துவருகிறார். இந்நிலையில் இவர் நேற்றிரவு பெரம்பூர் தொடர்வண்டி நிலைய ஆட்டோ நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்துள்ளார்.
அப்போது பக்கத்திலிருந்த நடைமேடையில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. உடனே அவர் அங்கு சென்று பார்த்தபோது பெண் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தகவல் அளித்து குழந்தையை ஒப்படைத்துள்ளார்.
மேலும் இந்நிகழ்வு தொடர்பாக ஓட்டேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஐந்து மாத பெண் குழந்தையை வீசிச் சென்றது யார் என்பது பற்றி தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.