திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகேயுள்ள அய்யர்கண்டிகை கிராமத்தில் வசித்துவருபவர் முனுசாமி. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவரும் இவர் காலை சென்றால் மாலை வீடு திரும்புவார். வழக்கம் போல் இன்றிவர் வேலைக்குச் சென்றுவிட்டு, மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிலிருந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பத்து சவரன் தங்க நகைகள், ரூ. 20 ஆயிரம் ரொக்கப் பணம் உள்ளிட்டவைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே இதுகுறித்து அவர், கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.