Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலையில்லை… குளித்துக்கொண்டிருந்த மனைவி… எட்டிப்பார்த்த நபர்… பின் நடந்த சம்பவம்.!!

மனைவி குளிப்பதை எட்டிப்பார்த்த நபரை அடித்து உதைத்து அப்பெண்ணின் கணவர் அவனை போலீசில் ஒப்படைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னையை அடுத்துள்ள பல்லாவரம் பம்மல் சரஸ்வதிபுரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. இங்கு விழுப்புரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய மூர்த்தி என்பவன் தங்கி வேலை பார்த்துவருகிறான்..

இந்தநிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் கட்டட வேலை எதுவும் இல்லாததால் அந்த இடத்திலேயே படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள ஒரு வீட்டில் தண்ணீர் ஊற்றும் சத்தம் கேட்டவுடன் குளியல் அறையை எட்டிப் பார்த்துள்ளான் மூர்த்தி.. அப்போது ஒரு பெண் குளித்துக் கொண்டு இருந்தார்.. இதனைக்கண்ட அந்தப்பெண் சத்தம் போடவே  அந்தப்பெண்ணின் கணவர், மூர்த்தியை பிடித்து காது கிழிய அடித்து உதைத்து சங்கர் நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.

இதையடுத்து, அந்தப்பெண் கொடுத்த புகாரின்அடிப்படையில், மூர்த்தியைக் கைதுசெய்து பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பிரிவு எண் 4ன் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Categories

Tech |