திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்துள்ள துத்திப்பட்டு கலைஞர் நகர் பகுதியில் வசித்து வருபவர் இர்பான்.. இவருக்கு வயது 24 ஆகிறது. இவர், அதே பகுதியில் இருக்கும் தனியார் காலணி தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தார். இந்தநிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பழைய தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஆலாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சபிதா என்ற பெண்ணை காதல் செய்து திருமணம் செய்தார்..
சபிதா திருமணத்துக்கு பின் மதம் மாறி கணவருடன் வசித்து வந்த நிலையில், சபிதாவின் சகோதரி வர்ஷா அடிக்கடி வீட்டுக்கு சென்று வந்திருக்கிறார். அப்போது, சிறுமியிடம் ஆசையாகப்பேசி இர்பான் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமையை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை ராஜேந்திரன், சம்பவம் குறித்து ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.. புகாரின் அடிப்படையில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இர்பானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.