Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துக்க வீட்டுக்கு வா …மனைவியைக் கொன்று துக்க வீடாக்கிய கணவன் …!!

 திருமணம் ஆகி 4 மாதங்களில் குடிபோதையில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை  செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்  .

சென்னை பள்ளிக்கரணை,பெரும்பாக்கம் பசும்பொன் நகரைச் சேர்ந்த அய்யனார் என்ற அந்த நபர் நாள்தோறும் குடித்து விட்டு வந்து மனைவி அஞ்சலியை அடித்து துன்புறுத்துவது வழக்கம் எனக்கூறப்படுகிறது .இவர்களுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆகிறது .இந்தநிலையில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்வுக்கு வருமாறு அஞ்சலி ,அய்யனாரை அழைத்துள்ளார் .அதற்கு அவர் வர மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே போதையில் அஞ்சலியை தாக்கியும்,கழுத்தை நெறித்தும் அய்யனார் கொலை செய்ததாக கூறப்படுகிறது .அஞ்சலியின் உடலை மீட்ட போலீசார் அய்யனாரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Categories

Tech |