Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்த கணவன்… இதுதான் காரணமா?

 நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை பெருங்களத்தூர் விவேக் நகர் 5ஆவது தெரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த தம்பதியினர் ஜெகநாதன்(75) மற்றும் சுலோச்சனா(62). இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.. மகள்களுக்கு திருமணம் ஆகி சென்னையில் வசித்து வருகின்றனர். மகனும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மாலை அவர்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் தண்ணீா் டேங்க் குழாயில் கணவன் ஜெகநாதன் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார்.. இதனைப் பார்த்த குடியிருப்புவாசிகள், அவரது மனைவியிடம் தகவல் சொல்வதற்கு வீட்டுக்குள் சென்று பார்த்த போது சுலோச்சனா கழுத்தறுக்கப்பட்ட நிலையில், இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்திருக்கிறார்.

இதனையடுத்து பீர்க்கன்கரணை போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுக்கப்ட்டது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஜெகநாதன் ஒரு மாத காலமாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும், மனைவி சுலோச்சனா அடிக்கடி மொபைல்போனில் யாருடனோ பேசி வந்தது தொடர்பாக அடிக்கடி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுவந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் காரணமாக நேற்று மாலை வாக்குவாதம் ஏற்பட்டதால் ஜெகநாதன் அவரது மனைவியை வீட்டில் இருந்த அரிவாளால் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.

Categories

Tech |