Categories
கிரிக்கெட் விளையாட்டு

68 கோடி ரூபாயை அறிவித்தது ஐசிசி… கோப்பையை வென்றால் எத்தனை கோடி.?

உலக கோப்பையின் மொத்த பரிசு தொகையாக 68 கோடி ரூபாயை ஐ.சி.சி (ICC)  அறிவித்துள்ளது.

கடந்த மே 30-ம் தேதி இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்று விளையாடிய இத்தொடரின் லீக் சுற்று முடிந்து,  இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் அரை இறுதிக்குள் நுழைந்தன. அரை இறுதியில் இந்தியாவை நியுசிலாந்து அணியும், ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து அணியும் வென்றது.

இந்நிலையில் இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இறுதி போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் உலக கோப்பையின் மொத்த பரிசு தொகையாக 68 கோடி ரூபாயை ஐ.சி.சி (ICC)   அறிவித்துள்ளது.  இதில் உலக கோப்பையை வெல்லும் அணிக்கு கோப்பையுடன் சேர்த்து 27 கோடியே 42,00,000 ரூபாய் பரிசு தொகை வழங்கப்படுகிறது. ஃபைனலில் தோல்வியடையும் அணிக்கு 13 கோடியே 71,00,000 ரூபாய் பரிசு தொகையாக கொடுக்கப்படுகிறது.

அரை இறுதியில் தோல்வியடைந்த அணிகளான இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு தலா 5.4 கோடி ரூபாய் பரிசு தொகையாக கொடுக்கப்படவுள்ளது. மேலும் முதல் சுற்றுடன் வெளியேறிய 6 அணிகளுக்கு இந்திய மதிப்பில் தலா 68 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட இருக்கிறது.

Categories

Tech |