Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இனி மெதுவாக பந்து வீசினால் கேப்டனுக்கு அபராதம் கிடையாது” அதிரடியாக விதியை மாற்றிய ஐசிசி..!!

இனி மெதுவாக பந்து வீசினால் கேப்டனுக்கு மட்டுமில்லாமல் மொத்த வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. 

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசி முடிக்காமல் இருந்தால் கேப்டன்களுக்கு ஓரிரு ஆண்டுகள் தடை விதிக்க்கப்படும் என்ற  முறை இதுவரையில் இருந்து வந்தது. அதாவது மெதுவாக பந்துவீசிய பிரச்சினையில் சிக்கினால் அணியின் கேப்டனுக்கு அபராதம் மட்டுமின்றி தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்படும். ஒரு ஆண்டுக்கு 2 முறை இந்தப் பிரச்சினையில் சிக்கினால்  தகுதி இழப்பு புள்ளிகளின் எண்ணிக்கை உயரும். அதனடிப்படையில் கேப்டன்களுக்கு தடை விதிக்கப்படும்.

Related image

ஆனால் இப்போது இந்த தடை அனைத்தையும் ஐசிசி அதிரடியாக நீக்கியுள்ளது. இனி மெதுவாக பந்து வீசினால்  மொத்த வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது ஐசிசி. அதோடு அதுமட்டுமில்லாமல் பந்து தலையில் பலமாக தாக்கப்பட்டு வீரர் ஒருவர் காயமடைந்தால் அவருக்கு பதிலாக மாற்று வீரர் களமிறங்கி, பேட்டிங் மற்றும் பவுலிங் செய்யலாம் என்றும் ஐசிசி கூறியுள்ளது. ஐசிசி யின் இந்த புதிய விதிமுறை வருகின்ற 1-ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

Categories

Tech |