Categories
கிரிக்கெட் விளையாட்டு

ராணுவ தொப்பி அணிந்து விளையாடியது குற்றமா….. பாகிஸ்தானுக்கு புரிய வைத்த ஐ.சி.சி..!!

இந்திய அணி வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடியதற்கு பாகிஸ்தான் குற்றம் சுமத்திய நிலையில் ஐ.சி.சி அதற்க்கு விளக்கம் அளித்துள்ளது.  

புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையினர் (CRPF) 40 பேர் கொல்லப்பட்டனர். CRPF வீரர்களுக்கு  அஞ்சலி செலுத்தும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஞ்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற  3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்திய  ராணுவத்துக்குரிய தொப்பியை அணிந்து விளையாடினர். அதுமட்டுமில்லாமல் அந்த போட்டியின் மூலம் வரும் வருமானத்தை  உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு நலநிதியாக வழங்குவதாகவும் இந்திய அணி வீரர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ராஞ்சியில்  நடைபெற்ற  போட்டியில் இந்திய அணி வீரர்கள் ராணுவ வீரர்களுக்குரிய தொப்பியை அணிந்து விளையாடியதற்கு  பாகிஸ்தான் அரசாங்கம் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெமூத் குரேஷி  இந்திய கிரிக்கெட் அணி  வீரர்கள் தங்கள் அணிக்குரிய தொப்பியை அணிந்து விளையாடாமல் அதை தவிர்த்து ராணுவ தொப்பியை அணிந்து விளையாடியதை உலகம் முழுவதும்  பார்த்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இதனை  பார்க்கவில்லையா? இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது ஐ.சி.சி.யின் கடமை ’என்றார்.

பாகிஸ்தான் தகவல்துறை மந்திரி பவாத் சவுத்ரி, ராணுவ வீரர்களின் தொப்பியுடன் இந்திய அணி வீரர்கள் மைதானத்தில் வலம் வந்த புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். ‘இது வெறும் கிரிக்கெட் அல்ல என்றும், ஜென்டில்மேன் விளையாட்டில் அரசியல் கலக்கப்பட்டு இருக்கிறதென்றும்,  இதனால் இந்திய அணியின்  மீது ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் ‘‘இது போன்ற செயல்களில் ஈடுபடும்  இந்திய அணி இந்த செயலை நிறுத்திக் கொள்ளாவிட்டால், காஷ்மீரில் இந்தியர்களின் அத்துமீறலை உலகுக்கு தெரியப்படுத்தும் விதமாக  பாகிஸ்தான் கிரிக்கெட்அணி  வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவார்கள்  என தெரிவித்து மேலும்  இந்திய அணியின்  மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யிடம் முறைப்படி புகார் கொடுக்க வேண்டும்’ என்று பவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்  முன்னாள் கேப்டனும், தற்போதைய தேர்வு குழு தலைவருமான இன்சமாம் உல்–ஹக்,  தெரிவித்தது ‘நான் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர். கிரிக்கெட் மட்டுமே எனது பணியென்றும்  இது அரசியல் சம்பத்தப்பட்ட விவகாரமென்றும்,  இதில் தலையிட நான் விரும்பவில்லையென்றும், அதே நேரத்தில் கிரிக்கெட்டையும், அரசிலையும் ஒன்றாக கலக்கக்கூடாது’ என்று குறிப்பிட்டார்.

ராணுவ தொப்பியை பயன்படுத்தலாமா வேண்டாமா குறித்து இந்திய கிரிக்கெட் அணி வாரியம் முன்கூட்டியே ஐ.சி.சி.யிடம் ஆலோசனை நடத்தியது. அதன் பின்னரே இந்த செயல் விதிமீறல் அல்ல என்று உறுதி செய்யப்பட்ட பிறகே அந்த விசே‌ஷ தொப்பியான ராணுவ தொப்பியை  இந்திய அணி  வீரர்கள் அணிந்து விளையாடினர். ‘இது நலநிதி திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாகும்’ என்று ஐ.சி.சி. செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

Categories

Tech |