பெரியார் சிலை குறித்து கனல் கண்ணன் பேசியது சர்ச்சைகளுக்கு உள்ளான நிலையில் தற்போது அவரது முன் ஜாமின் பண்ணுவானது தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது.
இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்ப பிரச்சாரப் பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயிலில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற சினிமா “ஸ்டண்ட் மாஸ்டர்” ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு எதிரே உள்ள பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசி இருந்தார்.
இது தொடர்பாக தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையத்தில் புகார் அளித்தார். அதில் இரு பிரிவினர் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கனல் கண்ணன் மீதும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை வேண்டும் எனவும் அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகார் தொடர்பாக கனல் கண்ணன் மீது களங்கம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கனல் கண்ணன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவானது இன்றைய தினம் நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, கனல் கண்ணன் பேசியதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், மேலும் அவருடைய பேச்சு என்பது இரு பிரிவினர் இடையே பகைமையை ஏற்படுத்தி, வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாகவும், எனவே அவரை விசாரிக்க வேண்டியது கட்டாயம் என்பதால், அவருக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது என்றும் காவல்துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி கனல் கண்ணனுக்கு முன் ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி கனல் கண்ணன் தாக்கல் செய்த அந்த முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருக்கிறார். இந்த வழக்கில் காவல்துறையினர் உடைய வாதம் என்பது இரு பிரிவினர் இடையே பகை உண்டாக்கும் வகையில் கனல் கண்ணன் பேசியதற்கு ஆதாரம் உள்ளது. எனவே அவரை கைது செய்து விசாரிப்பதில் கட்டாயம் எனவும், முன் ஜாமின் வழங்கக் கூடாது என்றும் சொல்லப்பட்டதால் எப்போது வேண்டுமானாலும் அவரை போலீஸ் கைது செய்யும்.