இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகின்றது.
இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
நேற்று வரை ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 500 களில் இருந்த அந்த எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 706 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,598ஆக உயர்ந்துள்ள நிலையில் 95,527 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 97581 பேர் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிராவில் 70,013 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு 30,108 பேர் குணமடைந்து இருக்கின்றார்கள். 2,362 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை தமிழகத்தில் 23,495 பேரும், டெல்லியில் 20,834 பேரும், குஜராத்தில் 17,200 பேரும், ராஜஸ்தானில் 8,980 பேரும், தெலுங்கானாவில் 2,792 பேரும், ஆந்திராவில் 3,783 பேரும், கர்நாடகாவில் 3,408 பேரும், கேரளாவில் 1,326 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.