Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர், உடன்குடி பகுதியில் நாளை மின்தடை!

திருச்செந்தூர், உடன்குடி பகுதியில் நாளை (30ஆம் தேதி) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்செந்தூர் கோட்ட மின் வினியோக செயற்பொறியாளர் பொன் கருப்பசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

திருச்செந்தூர் :

ஆறுமுகநேரி துணை மின் நிலையத்தில் 33 kw பிரேக்கர் மாற்றும் பணிகள், மின்கம்பங்கள் நிறுவும் பணிகள் நாளை நடக்கிறது. எனவே புன்னக்காயல், ஆத்தூர், பேயன்விளை, வீரபாண்டியபட்டினம், காயல்பட்டணம், தளவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், சுகந்தலை, நல்லூர், அம்மன்புரம், பூச்சிக்காடு, காணம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித் தோட்டம், குரங்கணி, தேமான்குளம், திருக்கோளூர், ஆகிய ஊர்களில் நாளை சனிக்கிழமை (30ஆம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

உடன்குடி : 

இதேபோன்று உடன்குடி துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் நாளை சனிக்கிழமை நடக்கிறது. எனவே உடன்குடி, தைகாவூர், சீர்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியார் குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, குலசேகரபட்டினம், மணப்பாடு, மெய்யூர் பிறை குடியிருப்பு, கடாட்சபுரம், அன்பின் நகரம் ஆகிய பகுதிகளில் நாளை (30ஆம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |