Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனாவிலிருந்து மீண்டு வரும் மதுரை – மகிழ்ச்சியில் மக்கள்.!!

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சிலதினங்களாக மெல்ல குறைந்து வருவது சற்று ஆறுதல் அளிக்கிறது..

கொரோனா வைரஸ் தமிழகத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் தான் அதிக அளவில் பரவி வந்தது.. அதனை தொடர்ந்து மதுரையில் கொரோனா மிகவும் தீவிரமாக பரவி வந்தது.. மதுரையில் கடந்த வாரம் முன்பு வரை நாள் ஒன்றுக்கு சராசரியாக 200இல் இருந்து 300 பேர் வரை கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இதையடுத்து கொரோனா தொற்றின் பாதிப்பு கடந்த சில தினங்களாக வெகுவாக குறைந்து வருகிறது. நேற்று (ஜூன் 20) ஒரே நாளில் 106 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 111 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து காய்ச்சல் கண்டறியும் முகாம்களை மிகத் தீவிரமாக நடத்தி வருகின்றன.. அதேபோல் மாநகராட்சி பகுதிகளில் வீடு வீடாக சென்று காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்தும் கணக்கெடுக்கப்பட்டு, உடனடியாக அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்திலிருந்து இதுவரை 8,357 பேர் சிகிச்சை பெற்றுள்ள நிலையில், தற்போது வரை  4,934 பேர் பூரண குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். 3,263 பேர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சைப் பலனின்றி 160 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக 200க்கும் கீழ் பாதிப்பு குறைந்துள்ளது மக்களுக்கு சற்று மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாக இருக்கிறது.

Categories

Tech |