தென்கொரியாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஒரே நாளில் 4 ஆயிரமாக உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியாவில் கொரோனா தொற்று பாதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 4,116 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அதாவது தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 35 பேர் உயிரிழந்துள்ளதாக தென்கொரியாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு முகமை தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் தென்கொரியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 3,363-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனா பாதிப்பு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கிடையே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஆஸ்திரியாவில் ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக மக்கள் கவலையில் உள்ளனர்.