ஜார்கண்ட்டில் மர்மநபர்கள் காந்தி சிலையை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹஸாரிபாக் என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி சிலையை சமூக விரோதிகள் சிலர் அடித்து நொறுக்கி சுக்கல் சுக்கலாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து போய் உடனே காவல்துறையிடம் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சந்தேகத்திற்கு உரிய சில நபர்களின் நடமாட்டம் இருந்ததாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிகழ்வில் ஈடுபட்ட கும்பலை விரைவில் கைது செய்வோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.