திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் அக்பர்.. இவரை திருச்சியை சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் கடத்தி புதுக்கோட்டை-திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள செங்கலாக்குடி கிராமத்துக்கு கொண்டு வந்துள்ளது. பின்னர் அங்கு, அவரை கயிற்றால் கட்டிவைத்து அந்த கும்பல் கொடூரமாக தாக்கியதில் அக்பர் பலியாகி விட்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மண்டையூர் போலீசார், அக்பரின் உடலை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய அந்த கும்பலை வலைவீசி தேடிவருகிறார்கள்.. மேலும் அக்பருக்கும், மற்றொரு நபருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்ததாகவும், அந்த கும்பலால் அக்பர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.