தெற்கு டெல்லியில் தனியார் பள்ளி துப்புரவு தொழிலாளி ஒருவர் அதே பள்ளியில் பயிலும் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு டெல்லியில் இயங்கிவரும் ஒரு தனியார் பள்ளியில் துப்புரவு தொழிலாளி ஒருவர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளிக்கு அருகிலுள்ள பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த துப்புரவு தொழிலாளி அங்கு படித்து வரும் சில குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. இதுதொடர்பாக தெற்கு டெல்லி இணை ஆணையர் விஜய் குமார் கூறுகையில், இப்பள்ளியில் படித்து வரும் ஒரு 5 வயது குழந்தை தனது தாயிடம் வயிறு வலிப்பதாக கூறியிருக்கிறார்.
அதை தொடர்ந்து அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு சோதனை செய்து பார்த்ததில் அக்குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தான் அக்குழந்தையின் தாய் எங்களிடம் (போலீஸ்) புகார் கொடுத்தார். இந்த புகார் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அக்குழந்தைக்கு தொண்டு நிறுவனத்தின் மூலம் கவுன்சிலிங் கொடுத்தபோது அப்பள்ளியின் துப்புரவு தொழிலாளி ஒருவர் இக்குழந்தையை பல முறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த துப்புரவு தொழிலாளியை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளோம்.
மேலும் அவர் கூறுகையில், அப்பள்ளியில் படித்து வரும் மற்ற அணைத்து குழந்தைகளுக்கும் கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் இதே போல வேறு சில குழந்தைகளையும் இந்த துப்புரவு தொழிலாளி பாலியல் சில்மிஷம் செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி அப்பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சியை பார்க்கும் போது அவர் பெண் குழந்தைகளுடன் கழிவறைக்கு செல்வது தெளிவாக பதிவாகியுள்ளது. இது பற்றி பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம்” என்று தெரிவித்தார். துப்புரவு தொழிலாளியாக பணியாற்றும் இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.