Categories
சென்னை மாவட்ட செய்திகள்

40 சவரன் தங்க, வைர நகைகள் கொள்ளை… உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்..!!

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 40 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை – மதுரவாயல் அடுத்துள்ள அடையாளம்பட்டு, மில்லினியம் நகர குடியிருப்புப் பகுதியில் இருக்கும் வீட்டில் வசித்து வருபவர், கே.எஸ்.குமார்.. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன்  வீட்டைப் பூட்டிவிட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட குடும்பத்துடன் சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை வீட்டை சுத்தம் செய்யும் பெண் வந்து பார்த்தபோது, வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது முகமூடி மாட்டிக் கொண்டு வீட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்து உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத 2 பேர், வீட்டின் பூட்டை உடைத்து,  பீரோவில் இருந்த 40 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றிருப்பதும், மேலும் வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடங்கிய டி.வி.ஆர் பெட்டியையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்..

இது குறித்து மதுரவாயல் போலீசார் தனிப்படைகள் அமைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கறிஞர் வீட்டிலேயே கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |