தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே இருக்கும் பள்ளியக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சேகர்.. இவருக்கு வயது 38.. இவருக்கு திருமணம் முடிந்து கலையரசி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.
இந்தநிலையில், நேற்று மாலை சுமார் 7 மணியளவில் சேகர், மணக்கரம்பை பைபாஸ் சாலையில் அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், திருவையாறு காவல் துணை கண்காணிப்பாளர் சித்திரவேல் மற்றும் போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். லாரி டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவையாறு பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.