நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்துள்ள கூத்தூர் பகுதியில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கில், கோகுர் கிராமத்தைச் சேர்ந்த ராஜபாண்டியன் என்பவர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இந்தப் பெட்ரோல் பங்கிற்கு கீழ்வேளூர் திமுக சேர்மன் வாசுகி, அவரது கணவரும் திமுக துணை ஒன்றிய செயலருமான நாகராஜன் ஆகியோர் தங்களது காரில் டீசல் போட வந்துள்ளனர்.
அப்போது, 300 ரூபாய் கொடுத்து நாகராஜன் டீசல் போட்டபோது, டீசல் போடும் கருவி வேலை செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இவருக்கும் பெட்ரோல் பங்க் ஊழியர் ராஜபாண்டியனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையே கைக்கலப்பில் ஈடுபட்டனர்.