Categories
தேசிய செய்திகள்

திருமணமான பெண்ணிடம் அத்துமீறல்… ஸ்டேஷனில் புகாரளித்து விட்டு… கொடூரனை அடித்துக்கொன்ற உறவினர்கள்..!!

திருமணமான பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ரவுடியை பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜலவர் மாவட்டத்திலுள்ள சுமேர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் தான் ராஜூ பக்ரி.. இவன் மீது ஏற்கனவே பாலியல் அத்துமீறல்  உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகள் அப்பகுதி போலீஸ் ஸ்டேஷனில் நிலுவையில் உள்ளன.. இந்தசூழலில் கடந்த வாரம் அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவரை அவன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளான்..

இதுபற்றி பாதிக்கப்பட்ட அந்தபெண்ணின் உறவினர்கள் போலீசாரிடம் புகாரளித்துள்ளனர்.. புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அவனை கைது செய்வதற்கான முயற்சியில் இருந்தனர்.. இருப்பினும் போதிலும் பக்ரிக்கு சரியான பாடம் புகட்ட நினைத்த அந்தபெண்ணின் உறவினர்கள்  இரும்பு கம்பிகளால் கொடூரத்தனமாக தாக்கியதில் அவன் உயிரிழந்தான்.. இந்தசம்பவம் தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |