இந்நிலையில் நேற்று பகல் நேரத்தில் அவர் திடீரென தூக்குமாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அதனைத்தொடர்ந்து, நேற்று மாலை பணி முடிந்து அவரது கணவர் தனபால் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டின் கதவை வெகு நேரமாக சத்தம்போட்டு தட்டிப்பார்த்தும் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த தனபால் உடனே தான் வைத்திருந்த மாற்று சாவி மூலம் கதவை திறந்து பார்த்தார்.. அப்போது, வீட்டுக்குள் புவனேஸ்வரி தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்த சம்பவம் பற்றி தகவலறிந்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.. அப்போது, புவனேஸ்வரி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் வீட்டில் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாவது, கடந்த ஒருமாதமாக கொரோனா தொற்றால் நிறையபேர் இறப்பதாக வரும் தகவல்கள் என்னை மிகவும் அச்சத்தில் ஆழ்த்தி வந்தது..
ஒருவேளை கொரோனா வைரஸ் தொற்று எனக்கும் வந்துவிடுமோ? என்ற பயம் ஏற்பட்டுவிட்டது. இந்த பயத்துடனேயே தொடர்ந்து என்னால் வாழ முடியவில்லை.. ஆகவே என்னுடைய உயிரை விடுவதாக முடிவு செய்து, நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு யாரும் காரணமில்லை என்று எழுதப்பட்டிருந்தது.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “கொரோனா வைரஸ் தொற்று பற்றிய தகவல்கள் வர தொடங்கிய சில மாதங்களாகவே புவனேஸ்வரி மிகுந்த கவனத்துடன் இருந்து வந்துள்ளார். காய்கறிகளை மிகவும் சுத்தம் செய்து தான் பயன்படுத்தியிருக்கிறார். தொடர்ந்து கொரோனா குறித்த தகவல்களை கேட்டு வந்த மனஅழுத்தத்தால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்” என்று தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து புவனேஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் காவல் துணை ஆய்வாளர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.