Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தகாத உறவால் ஏற்பட்ட பயங்கரம்… ஒரே வீட்டில் பெண் எடுத்த இருவர்… வெட்டிக்கொலை செய்யப்பட்ட டிரைவர்..!!

திருமணத்தை மீறிய உறவால், ஆட்டோ டிரைவர் கொடூரமான முறையில்  கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி கே.டி.சி. நகரைச் சேர்ந்தவர்கள் பிரேம்குமார் (27) மற்றும் விக்னேஸ்வரன் (28).. இதில் பிரேம்குமார் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். விக்னேஸ்வரன் பழ வியாபாரம் செய்து வருகிறார்.. இருவரும் ஒரே வீட்டில் பெண் எடுத்துள்ளனர்.. இதில் விக்னேஸ்வரன் மனைவிக்கும், பிரேம்குமாருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விக்னேஸ்வரன் மனைவியை கே.டி.சி. நகரிலுள்ள வீட்டுக்கு பிரேம்குமார் அழைத்து வந்துள்ளார்..

இதனை அறிந்த விக்னேஷ்வரன் தன்னுடைய நண்பர்கள் 4 பேருடன், பிரேம்குமாரை தேடி ஆத்திரத்துடன் கே.டி.சி. நகருக்கு வந்துள்ளார்.. இதையடுத்து இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது.. இதில் கடும் கோபமடைந்த விக்னேஷ்வரன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பிரேம்குமாரை வெட்டினார்.. வெட்டுபட்டவுடன் சுதாகரித்துக் கொண்ட பிரேம்குமார் அங்கிருந்து தப்பி தெருக்களில் அலறியபடி ஓட ஆரம்பித்தார். இருப்பினும்  பிரேம்குமாரை விடாமல் விரட்டிச் சென்ற விக்னேஷ்வரனின் நண்பர்கள் ஓட ஓட வெட்டி படுகொலை செய்தனர்.

அதன்பின் விக்னேஸ்வரனும், அவருடைய நண்பர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தசம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தபோலீசார், தலைமறைவாகியுள்ள விக்னேஷ்வரன் அவனது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்..

Categories

Tech |