Categories
தேசிய செய்திகள்

திருமணமான 5 மாதத்தில்… புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… கணவர் மற்றும் குடும்பத்தாரை தேடும் போலீசார்..!!

இந்தியாவில் திருமணமாகிய 5 மாதத்திலேயே புதுப்பெண்ணை குடும்பத்தினர் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அனில் துயாகி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அஞ்சலி(25) என்ற பெண்ணுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது அஞ்சலியின் பெற்றோர் ரொக்கமாக பணத்தை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.இருந்தாலும் திருமணத்திற்கு பின் 11 லட்சம் ரூபாய் வரதட்சணை பெற்று வர சொல்லி அஞ்சலியை அவரின் கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் இரு நாட்களுக்கு முன் அஞ்சலியின் கணவர் மற்றும் மாமனார், மாமியார் மூவரும் சேர்ந்து அஞ்சலியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். பின்னர் தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அஞ்சலியின் சடலத்தை கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து அஞ்சலியின் சகோதரர் ராம்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், என் சகோதரி திருமணம் ஆன நாள் முதல் கணவர் குடும்பத்தார் கொடுமைகளை அனுபவித்து வந்துள்ளாள். அவளை தினமும் வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். எனது சகோதரியை கொலை செய்த மூவரையும் விரைவில் கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தலைமறைவாகி இருக்கின்ற அனில் மற்றும் அவரது தாய் தந்தையரையும் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |