5 வயது மகள் மனைவியின் கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்டதையடுத்து, தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவின் போச்சாரம் (Pocharam) என்ற கிராமத்தில் உள்ள விஹார் (Vihar) காலனியில் 5 வயது சிறுமி திருமணத்திற்கு மீறிய உறவால், தாயின் கள்ளக் காதலனால் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து மனமுடைந்த அந்த சிறுமியின் தந்தை 10 நாட்கள் கழித்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதில், போங்கிர் Bhongir, நகரைச் சேர்ந்த கல்யாண் ராவ் (Kalyan Rao) என்பவர் அனந்த பூர் மாவட்டத்தை சேர்ந்த அனுஷா (Anusha) என்ற பெண்ணை காதலித்து கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.. கல்யாண் ராவ் ஆத்மகூர் கிராமத்தில் பஞ்சாயத்து செயலாளாராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறக்க, அதற்கு ஆத்யா (Aadhya) என்று பெயர் வைத்துள்ளனர்.. இந்த தம்பதியர் போச்சாரமில் இருக்கும் விஹார் காலனியில் வசித்து வந்துள்ளனர்.
Kalyan Rao
இந்தநிலையில், பேஸ்புக் மூலம் அனுஷாவும், செல்போன் கடை நடத்தி வரும் கருணாக்கர் என்பவரும் போங்கீரில் சந்தித்து நண்பர்களாகினர்.. இவர்களின் நட்பு நாட்கள் செல்ல செல்ல மிகவும் நெருங்கமாக தனிமையில் இருக்கும் அளவிற்கு இருந்துள்ளது.
அப்போது, கருணாகர் தன்னுடைய நெருங்கிய நண்பரான ராஜசேகர் என்பவரை அனுஷாவுக்கு அறிமுகப்படுத்தினார். அதன்பின் தான் பெரிய பிரச்சனையே ஆரம்பித்தது. ஆம், ராஜசேகரிடம் நெருங்கி பழகி வந்த அனுஷா, அதன்பின்னர் கருணாக்கரை தவிர்க்க தொடங்கினார்.
இதனால் கோபமடைந்த கருணாகர் ராஜசேகரைக் கொல்ல முடிவு செய்தார். அதற்காக கடந்த ஜூலை 2-ஆம் தேதி அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 2 கத்திகளை வாங்கிகொண்டு கருணாகர் கோபம் கொப்பளிக்க ராஜசேகரை தேடி, அனுஷாவின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அவரைகண்டதும், ராஜசேகர் ஆத்யாவின் குளியலறையில் பூட்டி ஒளிந்து கொண்டுள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த கருணாகர் அங்கே இருந்த சிறுமி ஆத்யாவை குத்திவிட்டு, பின் தன்னைத் தானே கத்தியால் கழுத்றுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக ஆத்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். பாவம் அந்த குழந்தை என்ன தவறு செய்தது.. ஆனால் கருணாக்கரின் உயிருக்கு ஆபத்து இல்லை.. அவருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின் கடந்த 7-ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து போலீசார் அவரை உடனடியாக கைது செய்தனர். இந்த நிலையில் ஒரே மகளை இழந்ததாலும், மனைவியின் தகாத உறவினாலும் மனவேதனையில் இருந்து வந்த கல்யாண் ராவ் கடந்த சனிக்கிழமை இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.