தூங்கிக்கொண்டிருந்த தந்தையை மகனே கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் லிங்கத்துறை. கொத்தனாராக பணிபுரிந்து வரும் இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சூர்யா அதே பகுதியை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றார். சம்பவத்தன்று மூத்த மகன் சூர்யா தனது பெற்றோருடன் சிறிது நேரத்தை போக்கிவிட்டு பின்னர் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். இந்நிலையில் இரவில் கண்விழித்த சூர்யா திடீரென தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தையை பெரிய கம்பார் கொடூரமாக தாக்க தொடங்கினார். இதில் பலத்த காயமடைந்த லிங்கத்துறை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இச்சம்பவத்தை பார்த்த லிங்குதுறையின் மனைவி மற்றும் மகன்கள் சத்தமிட சூர்யா அங்கிருந்து தப்பிச் சென்றார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்டையில் விரைந்து வந்த காவல்துறையினர் லிங்கத்துறையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு தலைமறைவான சூர்யாவை தேடி கண்டுபிடித்தனர். பின்னர் சூர்யாவை ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டபோது முன்னுக்குப் பின் முரணான பதில்களை கூறிய அவர் இதுவரை தந்தையை கொலை செய்ததற்கான காரணம் குறித்து எதுவும் கூறவில்லை என தெரியவந்துள்ளது.