கோவை எல்ஐசி காலனி பகுதியை சேர்ந்த தம்பதியர் நம்பிராஜன் மற்றும் செல்வி.. இவர்கள் இருவரும் குறிச்சி குளத்தில் நம்பிராஜன் அம்மாவுக்கு திதி கொடுப்பதற்காக நேற்று மாலை வந்துள்ளனர். திதி கொடுத்து முடித்த பின் நம்பிராஜன் தனது மனைவியிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார்.
இதனை கண்ட அந்த பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் நீண்ட நேரம் போராடி, இறந்த நிலையில் நம்பிராஜனின் உடலை மீட்டனர்.. இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இந்தசம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கொத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மது குடிப்பதற்கு மனைவி பணம் தராத காரணத்தால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.