சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகர் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் ராஜ்குமார் (வயது 31).. கூலித் தொழிலாளியான இவருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு திருமணமாகி, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.. இந்தநிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இதே பகுதியை சேர்ந்த ரமணி(வயது 35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் 2ஆவதாக அவரை சார்லஸ் திருமணம் செய்துகொண்டார்..
இதனிடையே அதே பகுதியில் வசித்து வரும் சார்லி என்பவருக்கும், மனைவி ரமணிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது.. இதனால் சார்லஸ் பலமுறை மனைவி ரமணியை கண்டித்து வந்துள்ளார்.. இதனால் அடிக்கடி இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.. இந்த மோதலின் காரணமாக மனைவி ரமணி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து, நேற்று மாலை சார்லஸ், ரமணியின் பெற்றோர் வீட்டுக்கு சென்று பேசி சமாதானம் செய்து மனைவி ரமணியை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.. பின்னர் வீட்டில் வைத்து திடீரென்று சார்லஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி ரமணியை ஆத்திரத்தில் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். அதனைத்தொடர்ந்து சார்லஸ் மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி எம்.கே.பி நகர் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்துள்ளார்.