Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அவனை தூக்கில் போடுங்க… அப்பதான் இறங்குவேன்… டவரில் ஏறி உறவினர் தற்கொலை முயற்சி..!!

அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி, அச்சிறுமியின் உறவினர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் என்ற கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இந்த சம்பவத்திற்கு சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் தங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த கொடுஞ் சம்பவத்தை செய்த பூக்கடை நடத்தி வந்த 27 வயது ராஜா என்பவன் மீது போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து  போலீசார் சிறையிலடைத்தனர்..

இந்தநிலையில், சிறுமியின் உறவினரான செல்வம் என்பவரின் மகன் விஜய் (வயது 27 ), அருகில் உள்ள செல்போன் டவரில் 100 அடி உயரத்தில் ஏறி நின்று கொண்டு இதற்கு சரியான நீதி வேண்டும் எனக் கோரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சிறுமியின் மரணத்திற்கு காரணமானவனை உடனடியாக தூக்கில் போட்டால் தான் நான் கீழே இறங்குவேன்.. இல்லையென்றால் மேலே இருந்து குதித்து உயிரை விட்டு விடுவேன் எனக் கூறினார்.. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..  இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  அவரை சமாதானம் செய்து கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதேபோல அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்களும் இறங்கி வருமாறு கூறியதை தொடர்ந்து, அவர் கீழே வந்தார்..

Categories

Tech |