Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகாலையில் பயங்கரம்..! இராணுவ வீரர் வீட்டுக்குள் புகுந்து… தாய் மற்றும் மனைவியை கொன்று விட்டு… நகையுடன் தப்பிய கொள்ளையர்கள்.!!

இராணுவ வீரர் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அவரின் மனைவி மற்றும் தாயை கொடூரமாக கொன்றுவிட்டு நகையை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகேயுள்ள முடுக்கூரணியை சேர்ந்தவர் இராணுவ வீரர் ஸ்டீபன். இவர் தற்போது லடாக் எல்லையில் நாட்டிற்காகக பணி புரிந்து வருகிறார். இந்த  நிலையில் இன்று அதிகாலை ஸ்டீபன் வீட்டுக்குள்  கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். பின்னர் ஸ்டீபனின் தாய் ராஜகுமாரி மற்றும் மனைவி சினேகாவை கொள்ளையர்கள் தலையணையை வைத்து அமுக்கி, கம்பியால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர். சினேகாவுக்கு 8 மாத குழந்தையும் இருந்துள்ளது.. குழந்தையை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை..

இதையடுத்து அவர்கள் வீட்டின் பீரோவில் இருந்த 70 சவரன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.. இந்த சம்பவம் நடக்கும்போது ஸ்டீபனின் தந்தை சந்தியாகு (60) விவசாய வேலையாக தோட்டத்திற்கு சென்றிருந்தார்.. முன்னாள் ராணுவ வீரரான இவர் வெளியே சென்ற நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பின்னர் குழந்தையின் அழுகை சத்தத்தால் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரட்டைக்கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணையை ஆரம்பித்தனர். அதனைத் தொடர்ந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சிவங்கையில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |