Categories
உலக செய்திகள்

8 ஜீன்ஸ் பேன்ட் ஒன்றுக்கு மேல் ஒன்று அணிந்து திருட முயன்ற பெண்.!!

கடையில் ட்ரெயல் பார்ப்பது போல் 8 ஜீன்ஸ் பேன்ட் திருட முயன்ற பெண் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

நம்மால் ஒரு நேரத்தில் ஒரு ஜீன்ஸ் பேன்ட் அணிவதே மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால், ஒரு பெண் எட்டு ஜீன்ஸ் பேன்ட் அணிந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், இளம்பெண் துணிக்கடையில் ஜீன்ஸ் பேன்ட் ட்ரெயல் பார்ப்பது போல், திருட முயற்சித்துள்ளார்.

Image result for The incident involving a woman trying to steal an 8 jeans pants.

இவர் ட்ரெயலுக்கு எடுத்துச் சென்ற எட்டு ஜீன்ஸ் பேன்ட்களையும் ஒன்றுக்கும் மேல் ஒன்றாக போட்டுக்கொண்டு கடையிலிருந்து வெளியேற முயன்றார்.ஆனால், கடையின் பாதுகாவலர் இதைக் கண்டுபிடித்துள்ளார். இதனையடுத்து குளியலறையில், பெண் அணிந்த எட்டு ஜீன்ஸ் பேன்ட்களும் ஒன்று ஒன்றாகக் கழட்டுகிறார்.

Image result for The incident involving a woman trying to steal an 8 jeans pants.

அந்தக் காவலாளி ஜீன்ஸ் பேன்ட் எண்ணிக்கையை வீடியோவாக எடுத்துக்கொண்டே கணக்கிடுகிறார். இச்சம்பவம் எங்கு அரங்கேறியுள்ளது என்பது பற்றி தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால், அப்பெண் வெனிசுலாப் பகுதியை சேர்ந்தவர் எனத் தெரிகிறது. இந்த காணொலி சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

Categories

Tech |