ஈரானில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் சாலையில் தரையிறங்கியதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
பொதுவாக விமானத்தில் பயணம் செய்பவர்கள் எப்பொழுதுமே ஒருவித அச்சத்தில் இருப்பார்கள் . காரணம் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்துவிடுமோ என்ற பயத்தில் தான். சில சமயங்களில் இன்ஜின் கோளாறு, கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்துக்குள்ளாகி பயணிகள் உயிரிழக்க நேரிடும். அதே சமயம் விமானியின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிரும் தப்பியுள்ளது.
இந்த நிலையில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்த சம்பவம் ஈரானின் மசாஹா் விமான நிலையம் அருகே கடந்த திங்கள்கிழமை நிகழ்ந்துள்ளது. அதாவது ஓடுபாதையில் இறங்க வேண்டிய விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, விலகி அருகே சாலையில் இறங்கியது.
அதிர்ஷ்டவசமாக விமானத்தில் பயணித்த 150 பேரும் உயிர் தப்பினர். இதில் 2 பேர் காயமடைந்தனர். மற்ற யாருக்கும் எவ்வித பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விமானம் சாலைக்கு வருவதை கண்ட பொதுமக்கள் பயந்து போய் அங்கிருந்து ஓடி விட்டதால் அவர்களும் உயிர் தப்பி விட்டனர்.